Saturday, August 30, 2008

தாம் தூம் திரை விமர்சனம்



மறைந்த இயக்குநர் ஜீவாவின் கடைசி படைப்பு.. படத்தை பார்த்து விட்டு வந்த போது தமிழில் ஒரு மிக சிறந்த கேமராமேனை மட்டும் அல்ல மிக சிறந்த இயக்குநரையும் இழந்து விட்டோம் என்று மனதில் ஒலித்து கொண்டே இருக்கிறது..

சாதாரண கதை தான்.. ரழ்யாவிற்க்கு செல்லும் ரவி ஒரு கொலை வழக்கில் மாட்டி கொள்கிறார்.. அதில் இருந்து தப்பித்து வருகிறார்..

எப்படி தப்பித்தார் என்று சொல்வதில் கில்லி மாதிரி அடிச்சு கலக்கி இருக்காங்க...


முதல் சீனில் கதாநாயகி அறிமுகத்தில் இருந்து சும்மா அலுப்பு தட்டாம அப்படியே கதையை நகர்த்தி கொண்டு செல்கிறார்கள்.. சவுண்ட் கொடுக்கலாம் என்று என்னோடு வந்த என் நண்பர்கள் அப்படியே இரண்டரை மணி நேரமும் வாய் மூடி மவுனமாக சில காட்சிகளில் தன்னை மறந்து கைதட்ட ஆரம்பித்து விட்டார்கள்..

ஜெயம் ரவி.. மிகவும் நல்ல நடிப்பை வெளி படுத்தி இருக்கிறார்.... அவ்வளவாக சண்டை காட்சிகள் இல்லாத இவருக்கு நடிப்பில் திறமையை வெளிபடுத்த நல்ல வாய்ப்பு.. வெல்டன் ரவி..


புது கதாநாயகி கங்கா ரானத்.. தமிழில் ஒரு ரவுண்ட் வருவார்.. அவரின் காட்சிகள் மிகவும் கலகலப்பாக செல்கின்றன.

கிராம புற காட்சிகளில் இவரின் மேக்கப் சற்றே இடிக்கிறது....



கூடவே ரழ்ய காட்சிக்ளில் லட்சுமிராய்.. அழகாய் இருக்கிறாய்.. பயமாக இருக்கிறது :)

கூடவே ஒரு லவ் டிராக் ..தொட்டு கொள்ள அலுப்பு தட்டாத காமேடி..

ஒளிப்பதிவு.. பேஷ் பேஷ் பிரமாதம்.. ஒளிப்பதிவும் ஜீவாதான்..ரழ்ய சேஸிங்க் காட்சிகள் அபாரம்

ஜெயராம் அடுத்த டிராக்கிற்க்கு தன் கேரியரை நகத்தி கொண்டு செல்கிறார் ..தமிழுக்கு புது வில்லன் தயார்.

பல காட்சிகள் தமிழுக்கு ரொம்ப புதுசு..அதுவும் அந்த சேஸிங்க் காட்சிகள்.. பலே பலே

பாடல்கள் ஏற்கனவே ஹிட் தான்.. படத்துக்கு பாடல்கள் மட்டும் அல்ல.. பிண்ணணி இசையும் பெரும் பலம்.... இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்கள் தாம் தூம் தான்

எதுவும் உறுத்தாத குடும்ப மசாலா சேர்த்த திரில்லர் டிக்காலா.. இனிப்பு காரம் தூக்காத வாசனை எல்லாம் சேர்ந்த சுவை..

தாம் தூம் தூள் தூள்..