நாம் என்ன நினைகின்றமோ அதுவே நாம் ஆகிறோம், நம் எண்ணங்களே நம்மை அந்த பாதையில் அழைத்து செல்கிறது.
Monday, August 18, 2008
பெங்களூரில் ஒரு மழை நாளில்
மழை இந்த சொல்லும் சரி அதன் ஆக்கமும் சரி எப்படி எனக்கு பிடித்து போனது என்று தெரியவில்லை. எனக்கு என்னவோ எனக்கு பின்னே நிழலை போல தொடர்ந்து வரும் தோழனாக மழையை எண்ணுகிறேன்
என்னவோ தெரியவில்லை.. பொறியியல் படிப்பை முடித்து விட்டு வேலை தேட ஊர் உலகம் சுற்ற கிள்ம்பிய போது ”பொத்துகிட்டு ஊத்துதடி வானம் “ என்ற அந்த பாடலின் முழுமையான அர்த்தைதை அப்போது தான் உணர்ந்தேன்..
பெங்களூரில் வேலை தேடும் படலை தொடர்ந்து போது தான் மழையின் உண்மையான சக்தியை உணர்ந்தேன்.. காலையில் எல்லா அண்ணாக்களும் அறையை காலி செய்த போன பின்பு என் அண்ணன் வாங்கி கொடுத்த ஷூவை அணிந்து கொண்டு இருந்த சில நல்ல ஆடைகளை உடுத்தி கொண்டு resume கொடுக்க செல்லும் படலத்தில் சொல்லி கொள்ளாமல் என்னையும் என் resumeகளையும் மொத்தையும் நனைத்து விட்டு சென்று விடும்.. என்னதான் இருந்தாலும் நன் சொந்த ஊரில் பெய்யும் மழைக்கும் அதன் மண் வாசனையின் சுவையே தனி..
இருந்தாலும் பெங்களூரில் பெய்யும் மழை எப்படி இருந்தாலும் நான் பிறந்த தஞ்சை மாவட்டத்துக்கும் நான் வளர்ந்த திருச்சிக்கும் தானே செல்கிறது என்று நாள்பட நாள்பட பெங்களூரில் மழை துளி சிதறும் போதே அதை ரசிக்க தொடங்கி விட்டேன்.. அதே மழையை மிகவும் உக்கிரத்துடம் மும்பையில் பார்த்த போது .... அதன் மேல் சற்று பயமும் வந்தது.. மும்பையில் இதேல்லாம் சகஜம்டா என்று சொல்லி இரண்டு நாட்கள் வீட்டை விட்டு கீழ் இறங்காமல் எங்கு காணிணும் தண்ணீரே என்று என்னை வியக்க வைத்த தருணமும் உண்டு.. பெங்களூரில் எப்போது மழை வரும்?? எப்போது மழை வராது என்று திருப்பி கேட்கலாம்.. நேரம் காலம் இல்லாது நெருங்கிய தோழனிடம் இருந்து வரும் இரவு நேர செல்பேசி செய்திகள் போல .. மழைக்கு பிறகு எனக்கு மிகவும் சினேகிதன் ஆட்டோ டிரைவர்கள்.. பெங்களூரில் முதல் வேலை கிடைத்த போது நான் வாங்கிய சம்பளத்துக்கு என்ன பைவ் ஸ்டார் ஓட்டலிலா தங்க முடியும்?? அப்போது நான் தங்கி இருந்த மேன்சனும் அல்லாத தனி வீடும் அல்லாத ஒரு கிரகத்தில் இருந்த போது பல ஆட்டோ ஓட்டுநர்கள் பழக்கம்..
பெங்களூரில் பல ஆட்டோ டிரைவர்கள் தமிழர்களாக தான் இருக்கின்றனர்.. அல்லது கொச்சை தமிழை பேசுபவர்களாக இருக்கின்றனர்..
கன்னடாவும் அறியாமல் இந்தியிம் தெரியாமலும் வாழ்ந்த அந்த காலங்களில் அவர்களே துணை..
மாத கடைசியில் பைக்க்கு பெட்ரோல் போட காசில்லாமல் தவித்த அந்நாட்களில் என் நிலை அறிந்து எனக்கு தெரியாமல் என் பைக் டாங்கை நிரப்பி வைத்தவர்கள் அவர்கள்...
சென்ற வாரம் திருச்சிக்கு போகலாம் என்று வீட்டை விட்டு கிளம்பிய போது மழையின் வேகம் அதிகமாகவே இருந்தது.. ஏற்கனவே முன் பதிவு செய்து இருந்த ksrtc பேருந்தை பிடிக்க வேண்டும்..
எங்கு பார்த்தாலும் மழை மழை மட்டுமே.. மடிவாலா செல்ல ஆட்டோ ஏதும் கிடைக்கவில்லை.. அரை மணி நேர காத்திருப்புக்கு பின் ஒரு ஆட்டோ வந்தது.
. எங்கே போகனனும் .
..Christ college
தமிழில் ஒன் அண்டு ஹாப் சார்ஜ் சார்.
. மணி பத்தரைக்கு மேல் ஆச்சு சரி வண்டிய எடுங்க ...
திருச்சி பேருந்து 10 : 50க்கு வரும்..
கோரமங்களா 80 feet road முழ்வதும் தண்ணீர் தண்ணீர் எங்கு பார்தாலும் தண்ணீர்.
. டிரைவர் சார் அப்படியே விவேக் நகர் வழியாக போங்க..
என் பேச்சை கேட்டு விவேக் நகர் வழியாக சென்ற ஆட்டோ ஒரு பள்ளத்தில் மாட்டி தண்ணீர் குடித்து நிம்மதியாக உறங்க சென்றது.
.. என்ன சார் உங்க பேச்சை கேட்டு இங்க வந்தா வண்டி ஆச்சே??
உங்களுக்கு மழையை ரசிக்க தெரியாதா??
ம் ரசிக்கலாம் சார்.. இப்படியே ரசிச்சுகிட்டு இருந்தா ஊட்ல சாப்பட்டுக்கு பதிலா வேற ஏதாச்சும் இருக்கும்..
நேரம் 10: 45 இனி நினைத்தாலும் பேருந்தை பிடிக்க போவதில்லை.. அம்மா அப்பாவை அடுத்த வாரம் பார்த்து கொள்ள்லாம்..
சரி ஸ்பார்க் ப்ளக்கை கழட்டி துடைச்சு மாட்டினா ஸ்டார்ட் ஆகிடும்.. செய்யலாமா?
சார் அதேல்லாம் பெட்ரோல் வண்டிக்கு தான்..இது காஸ் வண்டி.. காஸ் வண்டின்னா ஸ்பார்க் ப்ளக் கிடையாதா?
வேறு ஏதும் நான் பேசவில்லை..பேசவும் தோன்றவில்லை.. சரி சொல்லி பாக்கலாமா?
டிரைவர் சார்.. நான் engineer...என்னால சரி செய்ய முடியும் .. போங்க சார் உங்க தோளில் தொங்குதே லாப்டாப்பு உங்கள மாதிரி ஆளுங்க இதேல்லாம் சரி செய்ய முடியுமா?? என்ன சார் காமேடி கீமடி பண்றீங்களா??
முடியும்.. லாப்டாப் பேக்கை அப்படியே புறத்தில் வைத்தேன்.. தினமும் ஜிம்முக்கு சென்று வருவதால் உருவான தேகம்.. ம் முயற்சி செய்வோமே.. வுடுங்க சார்...
இல்லை பார்த்துடுவோம்..
இல்லை சார் நீங்க போயி...
இதை செய்வதில் என்ன குற்றம்?? ஸ்பானர் என் கை மாறியது.. ஆட்டோவின் பின் பாகத்தை திறந்து சற்று ஸ்பார்க் ப்ளக்கை சுத்தம் செய்து என் சக்தியை எல்லாம் பயண்படித்து ஆட்டோ ஸ்டார்ட் லீவரை இழுத்தேன்..
ம்... ஸ்டார்ட் ஆகி விட்டது.. சார்.. சொல்லுங்க.. எனக்கு கூட மழைன்னா ஆசை தான் சார்..
ஆனால் என்ன செய்யறுது.. நம்ம வாழ்க்கையில மழை வந்துச்சுனா புழைப்பு வீணா போகுதே...
எந்த ஊரு உங்களுக்கு? வேலூர் சார்.. அப்பாவுக்கு காட்பாடி.
எத்தனை வருசமா பெங்களூர்ல இருக்கீங்க??
பொறந்தது எல்லாம் இங்க தான் சார்.. அப்படியே போன பேச்சு தமிழ் நாட்டின் அனைத்து பிரச்சனைகளையும் தொட்டு சென்றது..
நேரம் 11 30..
ksrtc கவுணடரில்..
excuse me..what time to bus to trichy will arrive? volvo? yes its already left..
ஊருக்கு போக தற்போது விருப்பம் இல்லை.. அப்படியே மழையோடு இன்னம் ஒரு ஆட்டம் போட ஆசை,.. ஒரு ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு போகலாமா??
டிரைவர் சார் ..கோரமங்களா 4th block போகனும்..ஓசூர் ரோடு ஜெங்கசனில் டிராபிக் ஜாம் விவேக் நகர் வழியாக போகலாமா? நான் வழி சொல்கிறேன்...
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
nallaa eluthureenga sir... muthal variyilirunthu, kadisi varivarai.. aluppillaamal padikka mudinthathu ...
நீங்கள் தப்பித்தீர்கள்.
இப்படித்தான் பாருங்கள், புவனேஷ்வர் நகரத்தில் கொட்டும் மழையில் டாக்சிக்கரனிடம் அடாவடியாக ஒரு வழியாக செல்லும்படி மாதவன் கூற, டாக்சி பள்ளத்தில் மாட்டிக் கொள்ள, அவனிடம் மாதவன் பேச்சு வாங்க நேர்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//nallaa eluthureenga sir... muthal variyilirunthu, kadisi varivarai.. aluppillaamal padikka mudinthathu ...//
மிக்க நன்றி :)
//Blogger dondu(#11168674346665545885) said...
நீங்கள் தப்பித்தீர்கள்.
இப்படித்தான் பாருங்கள், புவனேஷ்வர் நகரத்தில் கொட்டும் மழையில் டாக்சிக்கரனிடம் அடாவடியாக ஒரு வழியாக செல்லும்படி மாதவன் கூற, டாக்சி பள்ளத்தில் மாட்டிக் கொள்ள, அவனிடம் மாதவன் பேச்சு வாங்க நேர்ந்தது.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
சார் அந்த அன்பே சிவத்தில் வரும் மாதவன் போல ஆக முடியுமா?
வருகைக்கு நன்றி :)
இலக்கியம் சார்ந்த பார்வை,
அனுபவங்கள் இலக்கிய தன்மையுடன் வெளிவருவது வெகு சில மட்டுமே,
காரணம் எங்கோ ஆரம்பித்து கருவை மறந்து வேறு எங்கோ சென்று விடுவார்கள்.
மழையும் மழையை சார்ந்த காட்சியமைப்புகளும் ஒரு காட்சியமைப்பை கண் முன் காட்டுகிறது,
அருமையான பதிவு
Post a Comment