Friday, September 12, 2008

கண்டதும் கேட்டதும் 12-09-2008


பெங்களூரில் இந்த வருடம் விநாயக சதுர்த்தி விழா மிக சிறப்ப்பாக கொண்டாபட்டது. சென்ற வருடத்தை விட பல இடங்களில் புதிதாக சிலைகள் முளைந்து இருந்தன. (பிஜேபி ஆட்சி உபயம்?)

கூடவே 3000 வாட்ஸ் குரலில் ஏதோ கன்னடா அல்லது தமிழ் பாடல்களை ஒலிபரப்பும் கூம்பு ஒலிபரப்பிகள்.

நீ பாட்டு கேட்டா என்ன கேட்கவில்லை என்றால் என்ன என்ற கண்டு கொள்ளாமல் என்நேரமும் சித்தாரன்னா சித்தாரன்னா (டைலாமே டைலாமோ) வோ அல்லது அடிறா அடிறா நாக்க மூக்காவோ ஒலித்து கொண்டு இருந்தது..

தினமும் மாலை வேளையில் ஏதோ ஒரு கலை நிகழ்ச்சி .. அந்த பகுதி சிறுவர்கள் கலந்து கொள்ளும் கலை நிகழ்ச்சிகள் ..என் ஏரியாவில் ஒரு சுட்டி பாப்பா சகானா பாட்டிற்க்கு ஆடிய நடனம் கண்கொள்ளா காட்சி,,

பெங்களூரில் விநாயகர் சதிர்த்தி விழாக்கள் மும்பை அளவிற்க்கு சென்று கொண்டு இருக்கிறதே என்று நினைக்கிறேன்.

நான் வசித்த அந்தேரியில் சிலையை கரைக்கும் நாள் வரை சும்மா அந்த ஏரியாவில் விளையாட்டு போட்டு கலை நிகழ்ச்சி ஆட்டம் என்று தூள் கிளப்புவார்கள். அந்த நாட்கள் தொடர்ந்து தாண்டியா ஆட்டம் ( நவராத்திரி ) என்று தொடர் கொண்டாத்தோடு மக்கள் கொண்டாத்தோடு திளைத்து இருப்பார்கள்.

இதை போல நிகழ்வுகள் இயந்திர மயமாக ஆகி கொண்டு இருக்கும் இன்றைய நகரங்களுக்கு தன்னை ஆசுவாசபடித்தி கொள்ள கிடைத்து இருக்கும் இளநீர் போல என்றே கருதுகிறேன்.

அனைத்து தரப்பு மக்களுக்கும் பல கவலைகள் இருக்கும்.. தன்னை மறந்து ஏதோ இடத்தில் கவலைகள் மறந்து செல்வார்கள் என்றால்..

எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் பிள்ளையார்களும் கூடவே ஒலி பெருக்கிகளும் வைக்கலாம் :)

*************************************************

சில நாட்க்களாக நான் ஏதும் என் வலைபூக்களில் எழுதவில்லை. ஒரு நெருங்கிய நண்பர் ஏன் எழுதவில்லை என்னாச்சு என்று குறுசெய்தி மூலம் கேட்டு கொண்டு இருந்தார்..

அப்படி ஒன்றும் காரணம் இல்லை.. தினமும் ஏதாச்சும் எழுத வேண்டும் எதாசுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் அல்லது இணைய தளங்களின் அடிமையாக இருக்க வேண்டும்.

நான் ஒன்னும் இது வரைக்கும் பெருசா எழுதி கிழிக்கலை.. இனிமேலும் அப்படி தான். இனிமேலும் அப்படி ஏதும் செய்யபோவதில்லை..


நானும் கருத்து களங்களில் அடிமையாக தான் இருந்தேன். அங்கு செலவு செய்த நேரங்களை எண்ணி பார்த்தால்....??

இணைய தளங்கள் தற்கால வாழ்க்கைக்கு நிகராக என்றோ வந்து விட்டது. இங்கும் துக்கம் சோகம் பின்னால் குத்துவது புறம் பேசுவது அழுகை பிடிவாதம் என்று மனிதர்களின் அணைத்து விதமான குண்ங்களும் சேர்ந்தே தெரிகிறது

முகம் தெரியாது என்ற ஒரே காரணத்தினால் பலவும் பல பலவாக நிகழ்கின்றன.

எனக்கு பொதுவாக என் தொடர்பாக யார் எது சொன்னாலும் கண்டு கொள்ள மாட்டேன்.

அதுவே சற்று மிகையாக சென்ற பின் ,

என்க்கு சம்பந்தம் இல்லாத என் குடும்பம் இணைய தளத்தில் வந்த போதும்,கூடவே என் தொடர்பான கற்பணையான பல செய்திகளும் என்னை தமிழ் இணைய தளங்கள் விட்டு விலக செய்தது..

அவ்வாறு செய்தவர்கள் யார் என்று எனக்கு தெரியும்.. ஏன் அவர்களை கம்பி எண்ண வைக்கவும் முடியும்..

கடைசியில் என்ன தவறு?

நிஜ வாழ்க்கையில் நமக்கு பிடித்தமான நண்பர்களை தேர்ந்து எடுக்கலாம்?
ஆனால் இந்த இணைய வாழ்க்கையில் எல்லாம் போலி தான்.. நன்றாக நடிக்க தெரிந்த போலிகள்.


தமிழ் இணைய தளங்களின் மீது எனக்கு எந்த வித நம்பிக்கையும் இல்லை..

என்னை பொருத்தவை நான் விரும்பி தேர்ந்து எடுத்த துறை இந்த பொறியியல் துறை.. இதில் சாதிக்கவே விரும்புகிறேன்

இங்கு இணைய தளங்களில் பேசி எந்த பயனும் இல்லை...
இந்த நேரத்தை ஏதேனும் புதிதாக தெரிந்து கொள்ள செயல்படித்தினால் மனதுக்கு நிம்மதி..


தமிழ் இணைய தளங்கள் + கருத்து களங்கள் அனைத்திலும் பாலிடிக்ஸ் கூட ஜால்ரா இருந்தால் நம்மை அடித்து கொள்ள யாரும் இல்லை.. ஆனால் கூடவே நமது சொந்த வாழ்க்கையை அது சிறிது சிறிதாக சீரழிப்பதை நாம் புரிந்து கொள்ள புரிந்து கொள்ளும் புத்தியும் இழந்து விடுவோம்..

இதை போல வெட்டி தமிழ் இணையங்களில் நேரத்தை வீணாக்குவதை விட சொந்த வாழ்க்கையிலும் சொந்த வேலை + தொழிலும் நேரத்தை வீணாக்கினால் ஏதாச்சும் உபயோகமாச்சும் இருக்கும்..

இங்கு நான் எழுதுவது வெளிபடாமல் இருக்கும் என் எண்ணங்களை தான்.. இதை எழுதி ஒரு மண்ணும் ஆவ போவதில்லை.. இருந்தாலும் சில நேரங்களில் சில சமரசங்கள் எனக்குள் தேவை படுகின்றன

9 comments:

வால்பையன் said...

/புதிதாக சிலைகள் முளைந்து இருந்தன.//

பார்த்து, அது அப்படியே கோயிலாகும் ஆபாயமுண்டு

வால்பையன் said...

//தினமும் ஏதாச்சும் எழுத வேண்டும் எதாசுக்கும் கருத்து சொல்ல வேண்டும் என்றால் அரை லூசாக இருக்க வேண்டும் அல்லது இணைய தளங்களின் அடிமையாக இருக்க வேண்டும்.//

என்ன தல, இப்படி போட்டு தாக்கிட்டிங்க.
அவனவன் தலைக்கு நாலு பிளாக் வச்சுகிட்டு தினமும் ரெண்டு போஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கான்

வால்பையன் said...

//இதை எழுதி ஒரு மண்ணும் ஆவ போவதில்லை.. //

அப்படியெல்லாம் நினைக்காதிங்க!
இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்னாளில் இந்த வார்த்தைகள் பொருந்தி வரலாம்

Anonymous said...

தேதி 12.09.08.

12.10.08 அல்ல.

இப்படிக்கு
ஒரு அரை லூசு!

Anonymous said...

விடுதலை புலிகள் விமர்சனம் உங்கள் பெயரில் சில ப்ளாக் களுக்கு (எனக்கும் தான்)வந்துள்ளது.
கொளத்தூர் மணி சாருக்கு அனுப்ப வேண்டியது மாறி விட்டதா
உங்களுக்கு சம்பந்தம் உண்டா .

Arun Kumar said...

//தேதி 12.09.08.

12.10.08 அல்ல.

இப்படிக்கு
ஒரு அரை லூசு!//

நன்றி தலைவா மாத்திட்டேன் :)

Arun Kumar said...

//Blogger ஆர்.கே.சதீஷ்குமார் said...

விடுதலை புலிகள் விமர்சனம் உங்கள் பெயரில் சில ப்ளாக் களுக்கு (எனக்கும் தான்)வந்துள்ளது.
கொளத்தூர் மணி சாருக்கு அனுப்ப வேண்டியது மாறி விட்டதா
உங்களுக்கு சம்பந்தம் உண்டா//

லக்கிலுக் என்ற நண்பர் என் ப்ளாக்கு இலவச விளம்பரம் செய்கிறார். அவருக்கு வேற வேலை இல்லை. கண்டுக்காம விடுங்க..:)

Arun Kumar said...

//என்ன தல, இப்படி போட்டு தாக்கிட்டிங்க.
அவனவன் தலைக்கு நாலு பிளாக் வச்சுகிட்டு தினமும் ரெண்டு போஸ்ட் போட்டுக்கிட்டு இருக்கான்//

அதான் தல
பித்தம் தலைக்கு ஏறிச்சுன்னு அர்த்தம் :)

Arun Kumar said...

//அப்படியெல்லாம் நினைக்காதிங்க!
இன்றைக்கு இல்லாவிட்டாலும் பின்னாளில் இந்த வார்த்தைகள் பொருந்தி வரலாம்//

கண்டிப்பாக வராது தல :)
இனி வரும் நாட்க்களில் எவனுக்கும் படிக்க நேரம் கூட கிடைக்க போவதில்லை