இன்று மாலை நேரம் citi bank ஏடிமில் பணம் எடுக்க சென்று இருந்தேன்.. மழை காரணமாகவோ அல்லது கிரிக்கேட் மாட்ச் காரணமாகவோ ஏடிம் எம் காலியாக இருந்தது.. சாலைகளிலும் ஆள் நடமாட்டம் இல்லை..
பணம் எடுத்து கொண்டு இருக்கும் நேரத்தில் ஒரு பெரியவர் அறுபதுக்கும் மேல் வயதிருக்கும்..ஏடிஎம் இல் வைத்து இருக்கும் காசோலை பெட்டியில் காசோலையை போட்டு விட்டு அங்கு இருந்த காவலாளியிடம் எப்போது இந்த காசோலையை எடுத்து செல்வார்கள் என்று முதலில் கன்னடாவில் கேட்டார்.. காவளாளியிடம் இருந்து பதில் இல்லை..
பின் ஆங்கிலத்தில் கேட்டார் அப்போது காவலாளி 6 PM 8 AM என்று ஏதோ உளறி கொண்டு இருந்தார்.. கடைசியில் இந்தியில் நாளை காலை 9 மணிக்கு வந்து காசோலைகளை எடுத்து செல்வார் என்று சொன்னார்..
பெரியவருக்கு இந்தி பேச வரவில்லை ஆனாலும் காவலாளி சொன்னது அவருக்கு புரிந்தது..
பெரியவர் கன்னடா உங்களுக்கு தெரியுமா என்று உடைந்த இந்தியில் அந்த காவலாளியிடம் கேட்டார்.. பதில் தெரியாது.
அடுத்த கேள்வி நீங்க எந்த மாநிலம் .. பதில் ஒரிஸா..
பெரியவரிம் இருந்து ஏதோ வறட்சியான புன்னகை.. ஏதோ தனக்குள் முனு முனுத்து கொண்டே வெளியே சென்றார்.. அந்த நேரத்தில் எனக்கும் பணம் எடுக்கும் வேலை முடிந்து விட்டு இருந்தது.. இருவரும் பேசி கொண்டது தெளிவாக புரிந்தது.. பெரியவரை நோக்கி சினேகமாக புன்னைகத்தேன்..
நீங்களும் ஒரிச்சாவா இல்லை பஞ்சாப்பா என்று ஆங்கிலத்தில் கேட்டார்.
நான் தமிழ்நாடு என்று கன்னடத்தில் பதில் சொன்னேன்..அவர் முகத்தில் ஆயிரம் வோல்ட் பிரகாசம்..
எனக்கு கன்னடா நன்றாக தெரியும் என்று மீண்டும் கன்னடத்தில் அவரிடம் சொன்னேன்.
உடன் அவருக்கு ஏதோ குற்ற உணர்ச்சி...
தமிழ்நாட்டில் எந்த ஊரு என்று கேட்டார்.. நான் திருச்சி என்று சொன்னேன்..
உடன் அவர் சொன்னது அந்த காவளாளியை கன்னடா தெரியுமா என்று கேட்டது சும்மா தான் ஏதும் பெரிய காரணமில்லை என்று சமாளித்து விட்டு சென்றார்..
சரி எங்கு செல்கிறீர்காள் என்று கேட்டேன்.. என் வீட்டுக்கு அருகில் தான் வசிக்கிறார்.. காரில் வாங்க போகலாம் உங்களை இறக்கி விடுகிறேன் என்று சொன்னேன்.. மிகவும் பிகு பண்ணி கடைசியில் ஏறி கொண்டார்.. காரில் முங்காரு மலே (கன்னட படம் ) பாடலை ஓட விட்டேன்.. கண்ணாடி வழியாக அவரை பார்த்தேன் ,அவர் முகத்தில் பரம் சந்தோழம்.. அவர் வீடு வந்த வுடம் வாங்க ஒரு காப்பி சாப்பிட்டு விட்டு தான் போக வேண்டும் என்று சொன்னார்.. ஆனால் கண்டிப்பாக காலையில் வந்து அவர் வீட்டில் காப்பி சாப்பிடுகிறேன் என்று சொல்லி விட்டு வந்தேன்..
யோசித்து பார்த்தேன்..
சென்னையில் தமிழ் தெரியாத ஒரு ஆள் வந்தால் எப்படி எல்லாம் அவர்களை சென்னைவாசிகள் தொந்தரவு செய்கிறார்கள் torture செய்கிறார்கள்.. எப்படி எல்லாம் தங்களின் ஆதிக்த்தை நிலை நிறுத்த நினைக்கிறார்கள் என்று நினைத்தேன்..
எனது ஒரு டில்லி நண்பணை செண்டரில் இருந்து மெரினா பீச் செல்ல மீட்டர் போட்டு ஊர் உலகம் சுத்தி காண்பித்து 500 ரூபாய் கறந்த அந்த ஆட்டோகாரர் நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது..
தன் சொந்தமாநிலத்தில் சொந்த மாநில தலைநகரத்தில் தன் சொந்த தாய் மொழியை பேச கூட முடியாமல் ஆனால் பெருந்தன்மையாக வந்தாரை வாழ வைக்கும் கன்னடர்களை நினைத்து நிஜமாகவே பெருமைபடுகிறேன்.. அந்த பெரியவர் தன் மொழியை பேச முடியாமல் சாதாரண வங்கி வேலைக்கு கூட கன்னடத்தை உபயோக்கிக்க முடியாமல் இருந்தாலும் மிகவும் பெருந்தன்மையாக செயல்பட்ட விதம் என்னை மிகவும் நெகிழ வைத்தது..
கண்டிப்பாக தங்களின் மொழி சிறுமைபடும் போது எந்த மக்களாக இருந்தாலும் போராடதான் செய்வார்கள்.. பெங்களூரில் கன்னடா மொழி சிறுமைபடும் போது கன்னட அமைப்புகள் போராடுவது சரி என்றே தோன்றுகிறது..
அதுவும் பெங்களூர் தமிழர்கள் ( தற்போது சமீப காலமாக இடம் பெயர்ந்தவர்கள்) செய்யும் கூத்து சொல்லில் அடங்காது.. கன்னடா கொத்தில்லா என்று சொல்லி நமுட்டு சிரிப்பு சிரிப்பதும்.. கன்னடர்களை மிக கேவலமாக பேசுவதும் நெடும் காலமாக பெங்களூரில் வாழ்ந்து வரும் தமிழர்களை மிகவும் பாதிப்பு ஆளாக்கி இருப்பது நிதர்சனம்,
என்னை பொருத்தவரை தமிழர்கள் மிகவும் மொழி வெறியர்களாக இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.. சில பேரை தவிர பலரும் தென்னகத்தின் மற்ற மொழிகளை கற்பதில் ஆர்வம் இன்றி எப்படி இந்தி மற்ற இந்திய மொழிகளை ஆதிக்கம் செலுத்துகின்றதோ அதை போல தமிழ் மற்ற திராவிட மொழிகளை ஆதிக்கம் செய்ய வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார்கள் என்பது என் கருத்து மட்டும் அல்ல நடப்பதும் அப்படி தான்..
தேசிய ஒற்றுமை ஒகேக்கனல் காவிரி என்று சில அரசியல்வாதிகளால் தூண்டி விடபடும் போது உணர்ச்சி வச பட்டு கர்நாடாகவில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் அவர்கள் கன்னட வெறியர்கள் என்று சொல்பவர்கள் முதலில் தாங்கள் எந்த லேபிலில் குத்த படும் வெறியர்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்..
திருவள்ளுவருக்கு அல்சூரில் சிலை அமைத்து என்ன ஆக போகிறது..??
இதனால் உலக புகழ பெற்ற திருக்குறக்கும் திருவள்ளுவருக்கும் மேலும் என்ன புகழ் சேர போகிறது??
இந்த கழக பழக்க வழக்கமான சிலை வைப்பது , இறந்தவரை வாழ்க என்று சொல்வது வெறித்தனமாக தலைவர்களை ஏதோ மண்ணில் பிறந்த கடவுள் அளவிற்க்கு ஆராபிப்பது போன்ற வழக்கங்களை தமிழ்நாட்டை விட்டு தாண்டும் போதே நிறித்தி கொள்ளாலாமே??
எந்த இடம் சென்றாலும் அந்த இடத்தின் மொழி மற்றும் கலாச்சாரங்களை மதித்து நடப்பது சான்றோர் செயல்..
No comments:
Post a Comment